சத்ய சோதனை - பக்கம் 310
நான் இவ்விதம் சொல்லி முடிப்பதற்குள் தயாப் சேத் பின்வருமாறு ஆத்திரத்தோடு கூறினார்: “உங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை சமூகத்திற்கேற்பட்ட அவமரியாதை அல்லவா? நீங்கள் எங்கள் பிரதிநிதி என்பதை நாங்கள் எப்படி மறந்து விட முடியும்?”
“உண்மையே. சமூகம்கூட இது போன்ற அவமரியாதைகளுக்கு உட்பட்டுவிட வேண்டியே இருக்கிறது. இதைத்தவிர நமக்கு வேறுவழி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டேன்.
“என்ன வந்தாலும் வரட்டும். புதிதாக ஓர் அவமரியாதைக்கு நாம் உட்படுவானேன்? இதையும்விட மோசமானது எதுவும் நமக்கு நேர்ந்துவிடப் போவதில்லை. மேற்கொண்டும் நாம் இழந்து விடுவதற்கு நம்மிடம் இன்னும் ஏதாவது உரிமை பாக்கி இருக்கிறதா?” என்று கேட்டார். தயாப் சேத்.
அது ரோஷமான பதில்தான். ஆனால், அதனால் என்ன பிரயோசனம்? இந்திய சமூகத்தினிடமுள்ள சக்தி இன்னது தான் என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன். நண்பர்களைச் சாந்தப்படுத்தினேன். அத்தூதுக் குழுவில் எனக்குப் பதிலாக இந்தியப்பாரிஸ்டரான ஸ்ரீ ஜார்ஜ் காட்பிரேயைச் சேர்த்துக் கொள்ளுமாறு யோசனை கூறினேன்.
ஆகவே, ஸ்ரீ காட்பிரே தூதுக் குழுவுக்குத் தலைவராகச் சென்றார். ஸ்ரீ சேம்பர்லேன் தமது பதிலில், நான் தூதுக் குழுவிலிருந்து விலக்கப்பட்டிருப்பதைப் பற்றியும் சொன்னார். “திரும்பத் திரும்ப அதே பிரதிநிதி சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதை விடப் புதிதாக ஒருவர் இருப்பது நல்லதல்லவா?” என்று கூறி, இந்தியருக்கு ஏற்பட்டிருந்த மனப்புண்ணை ஆற்ற முயன்றார்.
ஆனால், இவைகளினாலெல்லாம் காரியம் சரியாக முடிந்துவிடவில்லை. ஆனால், சமூகமும் நானும் செய்ய வேண்டிய வேலையையே இவை அதிகப்படுத்தின. நாங்கள் அடியிலிருந்து வேலையைத் தொடங்கவேண்டியிருந்தது. “நீங்கள் சொன்னதன் பேரில் தானே சமூகம் யுத்தத்தில் உதவி செய்தது! அதன் பலனை இப்பொழுது நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று சிலர் என்னைக் குத்திக் காட்டினார்கள். அதனால் நான் பாதிக்கப்பட்டுவிடவில்லை. “அப்பொழுது நான் கூறிய யோசனைக்காக இப்பொழுது நான் வருத்தப்பட வில்லை” என்றேன். “யுத்தத்தில் நாம் பங்கெடுத்துக் கொண்டதில் நாம் சரியான காரியத்தையே செய்தோம் என்பதை நான் இப்பொழுதும் கூறுகிறேன். அப்படிச் செய்ததில் நம் கடமையைத்தான் நாம் நிறைவேற்றினோம். கடமையை முன்னிட்டுச்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 310, நான், நாம், புத்தகங்கள், ஸ்ரீ, பக்கம், சத்ய, என்பதை, சோதனை, ஏதாவது, நமக்கு, நாங்கள், அதனால், இப்பொழுது, தூதுக், புதிதாக, இருக்கிறதா, சேத், போவதில்லை, நம்மிடம், சேம்பர்லேன், சிறந்த, தான், என்றேன், நீங்கள், அவமரியாதை, தயாப், பிரதிநிதி