சத்ய சோதனை - பக்கம் 249
‘வருங்காலத்தில் என் கருத்துக்கள் மாறிவிடுகின்றன என்று வைத்துக் கொள்ளுவோம். அந் நிலைமையில் என்னை விரதத்தினால் எப்படிக் கட்டுப்படுத்திக் கொள்ளுவது?’ இத்தகைய சந்தேகமே நம்மை அடிக்கடி தடுத்துவிடுகிறது. குறிப்பிட்ட ஒன்றைத் துறந்தாக வேண்டும் என்பதில் தெளிவான எண்ணம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே அந்தச் சந்தேகம் காட்டுகிறது. இதனாலேயே, ‘ஒன்றில் வெறுப்பு ஏற்படாத துறவு நிலைத்திராது’ என்று நிஷ்குலானந்தர் பாடியிருக்கிறார். எங்கே ஆசை அற்று விடுகிறதோ அங்கே துறவின் விரதம் இயல்பான, தவிர்க்க முடியாத பலனாக இருக்கும்.
8 பிரம்மச்சரியம் - 2 |
தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆம் ஆண்டில் நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டேன். இது சம்பந்தமாக எனக்கு இருந்த எண்ணங்களைக் குறித்து, அதுவரையில் என் மனைவியிடம் நான் எதுவும் கூறவில்லை. விரதத்தை மேற்கொண்ட சமயத்தில் மாத்திரமே அவளைக் கலந்து ஆலோசித்தேன். அவளுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. ஆனால், முடிவான தீர்மானத்திற்கு வருவதில் எனக்கு அதிகக் கஷ்டம் இருந்தது. அதற்கு வேண்டிய
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 249, நான், புத்தகங்கள், எனக்கு, என்னைக், என்பதையே, பக்கம், வெறும், விரதத்தை, சத்ய, சோதனை, அதனிடமிருந்து, பாம்பு, இன்னும், விரதம், கஷ்டம், காட்டுகிறது, என்பது, இதனாலேயே, சிறந்த, விரதத்தினால், வேண்டும், முடிவான, தீர்மானத்திற்கு