சத்ய சோதனை - பக்கம் 189
அத்தொழிலாளரின் ஒப்பந்த காலம், இந்தியாவுக்குப் போன பிறகு முடியச் கூடியவாறு அவர்களைக் கட்டாயமாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி விடுவது என்பது முதல் யோசனை. ஆனால், அந்த யோசனையை இந்திய சர்க்கார் ஒப்புக்கொள்ளுவதாக இல்லை. ஆகையால், கீழ்வரும் வகையில் மற்றோர் யோசனை செய்யப்பட்டது.
1. | இந்திய ஒப்பந்தத் தொழிலாளி, ஒப்பந்த காலம் தீர்ந்ததுமே இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும். |
2. | அப்படித் திரும்பவில்லையென்றால், ஒவ்வோர் இரண்டு ஆண்டுகளுக்கும் புதிதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இவ்விதம் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு தடவையிலும் கூலி உயர்வு கொடுக்கப்படும். |
3. | அப்படியின்றி, இந்தியாவுக்குத் திரும்பிவிடவோ, ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளவோ மறுத்தால், அத்தொழிலாளி ஆண்டுக்கு 25 பவுன் வரி செலுத்த வேண்டும். |
இந்த யோசனைக்கு இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக ஸர் ஹென்றிபின்ஸ், ஸ்ரீ மேஸன் ஆகியோர் அடங்கிய ஒரு தூதுகோஷ்டியை இந்தியாவுக்கு அனுப்பினார்கள். இந்தியாவில் அப்பொழுது லார்டு எல்ஜின் வைசிராயாக இருந்தார். 25 பவுன் வரி விதிப்பது என்பதை அவர் அங்கீகரிக்கவில்லை. ஆனால், மூன்று பவுன் தலைவரி விதிப்பது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இது வைசிராய் செய்த மோசமான தவறு என்று அப்பொழுது நான் எண்ணினேன் ; இன்றும் அப்படியே கருதுகிறேன். தமது அங்கீகாரத்தைக் கொடுத்ததில் அவர் இந்தியாவின் நலன்களைக் குறித்துக் கொஞ்சமும் எண்ணவே இல்லை. நேட்டால் வெள்ளையருக்கு இவ்விதம் சகாயம் செய்து கொடுக்க வேண்டியது அவருடைய கடமையும் அன்று. மூன்று, நான்கு ஆண்டுகளில் ஒவ்வோர் ஒப்பந்தத் தொழிலாளியும், அவர் மனைவியும்,16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வோர் ஆண் மகனும், 13 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் இந்த வரியைச் செலுத்த வேண்டியவர்களாயினர். ஒரு தொழிலாளியின் சராசரி வருமானம் மாதத்திற்கு 14 ஷில்லிங்குக்கு மேல் இல்லை. அப்படியிருக்க கணவன், மனைவி, இரு குழந்தைகள் ஆகிய நான்கு பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 12 பவுன் வரி விதிப்பது என்பது அட்டூழியம். இந்த அநியாயத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது.
இவ் வரியை எதிர்த்துத் தீவிரமாகக் கிளர்ச்சி செய்தோம். இவ் விஷயத்தில் நேட்டால் இந்தியர் காங்கிரஸ் சும்மா இருந்திருக்குமானால், 25 பவுன் வரியையும் வைசிராய்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 189, புத்தகங்கள், பவுன், அவர், இல்லை, வேண்டும், பக்கம், விதிப்பது, இந்திய, ஒவ்வோர், சத்ய, இந்தியாவுக்குத், சோதனை, என்பதை, மூன்று, நேட்டால், மேற்பட்ட, நான்கு, அப்பொழுது, வைசிராய், சிறந்த, காலம், ஒப்பந்தத், என்பது, ஒப்பந்த, இவ்விதம், யோசனை, ஒவ்வொரு, ஒப்பந்தத்தைப், செலுத்த