சத்ய சோதனை - பக்கம் 114
“ஆனால் லத்தீனை இரண்டாவது மொழியாகக் கொண்டு நான் லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறியிருக்கிறேனே” என்றேன்.
“உண்மை. ஆனால், எங்களுக்கு பி.ஏ.பட்டதாரியே வேண்டும்” என்று அவர் சொல்லிவிட்டார்.
ஆகவே, வேறு வழியில்லை. மனம் சோர்ந்துபோய்க் கைகளைப் பிசைந்துகொண்டேன். என் சகோதரரும் அதிகக் கவலைப்பட்டார். பம்பாயில் மேற்கொண்டும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு இருவரும் வந்துவிட்டோம். எனது சகோதரர், ராஜ்கோட்டில் ஒரு சின்ன வக்கீல். நானும் அங்கே போய்விடுவது என்று முடிவாயிற்று.மனுக்கள், விண்ணப்பங்கள் தயாரிப்பதில் கொஞ்சம் வேலையை அவர் எனக்குக் கொடுக்கலாம். மேலும், இப்பொழுதே ராஜ்கோட்டில் ஒரு குடித்தனம் இருப்பதால் பம்பாயில் இருக்கும் குடித்தனத்தை எடுத்துவிடுவதால் பணமும் நிரம்ப மிச்சமாகும். இந்த யோசனை எனக்குப் பிடித்தது. இவ்விதம் பம்பாயில் ஆறு மாதங்கள் தங்கியிருந்த பிறகு, அங்கே இருந்த எனது சிறு குடித்தனத்தைக் கலைத்து விட்டோம்.
நான் பம்பாயில் இருந்தபோது, தினமும் ஹைகோர்ட்டுக்குப் போவேன். ஆனால், அங்கே ஏதாவது கற்றுக் கொண்டதாக நான் கூறுவதற்கில்லை. அதிகமாகக் கற்றுக் கொள்ளுவதற்கு வேண்டிய சட்ட ஞானம் எனக்கு இல்லை. வழக்குகளின் நடைமுறை எனக்குப் பிடிபடுவதில்லை. ஆகையால், அங்கே தூங்கிவிட்டுத் திரும்புவேன். இதில் எனக்குக் கூட்டாளிகள் பலர் இருந்தனர். ஆகவே, நான் அவ்வளவாக வெட்கப்படுவதில்லை; கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஹைகோர்ட்டில் தூங்குவதே ஒரு நாகரிகம் என்று எண்ணக் கற்றுக்கொண்டுவிட்டதும், இருந்த வெட்க உணர்ச்சியும் கூட என்னை விட்டுப் போய்விட்டது.
பம்பாயில் நான் இருந்ததைப்போல், இந்தத் தலைமுறையிலும், கட்சிக்காரரே இல்லாத பாரிஸ்டர்கள் யாராவது இருப்பார்களானால் வாழ்க்கை நடத்துவதைப் பற்றிச் சில அனுபவ யோசனைகளை அவர்களுக்குக் கூற விரும்புகிறேன். கீர்காமில் நான் குடியிருந்த போதிலும் வண்டியிலோ, டிராம் வண்டியிலோ போவதே இல்லை. தினமும் ஹைகோர்ட்டுக்கு நடந்தே போவது என்பதை ஒரு விதியாக வைத்துக்கொண்டேன். அங்கே போய்ச் சேர எனக்கு நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். வீட்டுக்குத் திரும்பும் போதும் அநேகமாக நடந்தே வருவேன். வெளியில் நடந்து நடந்து, அந்தச் சூடும் என்னை எதுவும் செய்வதில்லை. கோர்ட்டுக்கு நடந்து
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 114, நான், பம்பாயில், அங்கே, புத்தகங்கள், பக்கம், என்னை, சத்ய, சோதனை, நடந்து, கற்றுக், தினமும், இருந்த, வண்டியிலோ, நடந்தே, எனக்கு, இல்லை, ராஜ்கோட்டில், அவர், என்பதை, சிறந்த, ஆகவே, எனது, எனக்குப், எனக்குக், பிறகு