');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
இருக்கவே நான் முயல்வேன். மற்றவர்களும் அவ்விதமே இருக்க
வேண்டுமென்று விரும்புகிறேன். அந்த அளவுகோலைக் கொண்டு
என்னை நானே அளவிடும்போது, சூரதாஸ் என்னும் பக்தர் பாடியது
போல நானும், 'என்னைப் போல் கொடிய, வெறுக்கத்தக்க பாவி வேறு
எவர் உண்டு? படைத்த பிரமனையே மறந்திடும் நன்றி கெட்டவன்
ஆனேன் நான்!' என்று கதற வேண்டும். ஏனெனில், என் வாழ்வின்
ஒவ்வொரு சுவாசத்தையுமே பரிபாலிப்பவனும், என்னை
ஈன்றெடுத்தவனுமான ஆண்டவனுக்கு இன்னும்
வெகுதொலைவிலேயே நான் இருந்து வருவது எனக்கு இடையறாத
சித்திரவதையாக இருக்கிறது. என்னுள் இருக்கும் தீய குணங்களே
என்னை அவனுக்குத் தொலை தூரத்தில் கொண்டு வந்து
வைத்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். என்றாலும்,
அவற்றிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. முன்னுரையை
இங்கு நான் முடிக்க வேண்டும். அடுத்த அத்தியாயத்திலிருந்து என்
கதையைத் தொடங்குவேன்.
ஆசிரமம், சபர்மதி
26, நவம்பர்,1925
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->