சத்ய சோதனை - முன்னுரை
கொள்கைகளைப் பற்றிய சித்தாந்தங்களை மட்டுமே விவாதிப்பது என்றால்,நான் சுய சரிதை எழுதும் முயற்சியில் இறங்கியிருக்க வேண்டியதே இல்லை. ஆனால், எனது நோக்கமோ, இக்கொள்கைகள் நடைமுறையில் பல வகையிலும் அனுசரிக்கப்பட்டு வந்திருப்பதன் வரலாற்றைக் கூறுவதாகும். ஆகவே, நான் எழுதப் போகும் இந்த அத்தியாயங்களுக்கு ‘நான் செய்த சத்திய சோதனையின் கதை’ என்று தலைப்புக் கொடுத்திருக்கிறேன். அகிம்சை, பிரம்மச்சரியம் முதலிய ஒழுக்க நெறிகளைப் பற்றிய சோதனைகளும் இவற்றில் அடங்கியிருக்கும்.இந்த ஒழுக்கநெறிகள் வேறு, சத்தியம் வேறு என்று கருதப்படுகிறது. ஆனால், சத்தியமே தலையாய தருமம்,அதில் மற்றும் பல தருமங்களும் அடங்கி இருக்கின்றன என்று நான் கருதுகிறேன். இந்தச் சத்தியம் என்பது உண்மை பேசுவது மாத்திரம் அல்ல; உள்ளத்திலும் உண்மையோடு இருப்பது என்பதையும் இது குறிக்கும். அத்துடன் நமக்குத் தோன்றும் சத்தியத்தை மட்டுமன்றி, சுத்த சுயம்புவான சத்தியமும்,நித்தியத்துவமான கடவுளையும் அது குறிக்கும். கடவுளைப்பற்றிய விளக்கங்கள் கணக்கில் அடங்காதவை. ஏனென்றால், அவர் காட்சி தரும் ரூபங்களும் எண்ணற்றவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - முன்னுரை, நான், புத்தகங்கள், முன்னுரை, முடிவுகள், சோதனை, சத்ய, தோன்றுகின்றன, பற்றிய, வேறு, மாத்திரம், சத்தியம், குறிக்கும், வந்திருக்கிறேன், சிறந்த, அவர், சோதித்து, துருவித், முடிவானவை