அர்த்தமுள்ள இந்துமதம் - பூஜையில் நிம்மத
பாவாய்! நிறைந்தபொற் பாவாய்! செந் தேனிற் பகர் மொழியாய்!
காவா யெனவயன் காவா பவனுங் கருதுமலர்
வாவா யெழி லொற்றி வாழ்வே! வடிவுடை மாணிக்கமே!
ஒயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல் போல்
ஈயா விடுனுமோ ரெள்ளளவேனு இரங்கு கண்டாய்
சாயா அருள்தரும் தாயே! எழிலொற்றித் தற்பரையே!
மாயா நலமருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே!
வாழி! நின் சேவடி போற்றி, நின் பூம்பத வாரிசங்கள்
வாழி! நின் றாள்மலர் போற்றி, நின் கண்ணொளி வாழி; நின்சீர்
வாழி! யென் னுள்ளத்தில் நீயுநின் னொற்றி மகிழ்நருநீ
வாழி! யென் னாருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே!
***
திருமாலை வணங்குகிறவர்கள் பிரபந்தத்திலுள்ள திருமங்கையாழ்வாரின் பின்வரும் பாடலைப் பாடுங்கள்.
கொங்க லர்ந்த மலர்க் குருந்த மொசித்த கோவல னென்பிரான்
சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணனின்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்குநீர்
செங்க யல்திளைக் கும்சு னைத்திரு வேங் கடமடை நெஞ்சமே!
பள்ளி யாவது பாற்க டலரங் கம்இ ரங்கவன் பேய்முலை,
பிள்ளை யாயுயி ருண்ட வெந்தை பிரான வன்பெருகும் இடம்
வெள்ளி யான்கரி யான்மணி நிற வண்ண னென்றெண்ணி, நாடோறும்
தெள்ளி யார்வணங் கும்ம லைத்திரு வேங் கடமடை நெஞ்சமே!
நின்ற மாமரு திற்று வீழ நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொ ழும்இணைத் தாம ரையடி யெம்பிரான்
கன்றி மாரி பொழிந் திடக்கடி தாநி ரைக்கிடர் நீக்குவான்
சென்று குன்ற மெடுத்த வன்திரு வேங் கடமடை நெஞ்சமே!
பார்த்தற் காயன்று பார தங்கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர்
கோர்த்தங் காயர் தம்பாடி யில்குர வைபிணைந்த எம் கோவலன்
ஏத்து வார்தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய யெம்பிரான்
தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ்த்திரு வேங்க டமடை நெஞ்சமே!
வண்கை யானவு ணர்க்கு நாயகன் வேள்வி யில்சென்று மாணியாய்
மண்கை யாலிரந் தான்ம ராமர மேழு மெய்த வலத்தினான்
எண்கை யானிம யத்துள் ளானிருஞ் சோலை மேவிய எம்பிரான்
திண்கைம் மாதுயர் தீர்த்த வன்திரு வேங்க டமடை நெஞ்சமே!
எண்டி சைகளு மேழு லகமும் வாங்கிப் பொன்வயிற் றில்பெய்து
பண்டோ ராலிலைப் பள்ளி கொண்டவன் பான்ம திக்கிடர் தீர்த்தவன்
ஓண்டி றல்அவு ணன்உ ரத்துகிர் வைத்தவன் ஒள்ளெ யிற்றோடு
திண்டி றல்அரி யாய வன்திரு வேங்க டமடை நெஞ்சமே!
பாரு நீரெரி காற்றி னோடா காச மும்இவை யாயினான்
பேரு மாயிரம் பேச நின்ற பிறப்பி லிபெரு கும்இடம்
காரும் வார்பனி நீள்வி சும்பிடைச் சோரு மாமுகில் தோய்தர
சேரும் வார்பொழில் சூழெ ழில்திரு வேங்க டமடை நெஞ்சமே!
அம்ப ரம்அனல் கால்நி லம்சல மாகி நின்ற அமரர்கோன்
வம்பு லாமல மேல்ம லிமட மங்கை தான்கொழு நன்அவன்
கொம்பி னன்னவி டைம டக்குற மாதர் நீளித ணந்தொறும்
செம்பு னம்அவை காவல் கொள்திரு வேங்க டமடை நெஞ்சமே!
பேசும் நின்திரு நாம மெட்டெழுத் தும்சொல் லிநின்று பின்னரும்
பேசு வார்தமை யுய்ய வாங்கிப் பிறப்ப றுக்கும் பிரானிடம்
வாச மாமலர் நாறு வார்பொழில் சூழ்த ரும்உல குக்கெல்லாம்
தேச மாய்த்திக ழும்ம லைத்திரு வேங்க டமடை நெஞ்சமே!
செங்க யல்திளைக் கும்சு னைத்திரு வேங்க டத்துறை செல்வனை
மங்கை யர்தலை வன்க லிகன்றி வண்ட மிழ்ச்செஞ்சொல் மாலைகள்
சங்கை யின்றித் தரித்து ரைக்கவல் லார்கள் தஞ்சம தாகவே
வங்க மாகடல் வையங் காவலர் ஆகி வானுல காள்வரே!
***
விநாயகரைப் பிரார்த்தியுங்கள். கீழ்க்கண்ட ஔவையாரின் அகவலைப் பாராயணம் செய்யுங்கள்.
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷிக வாகன!
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே,
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே எந்தன் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைத்தான் மகிழ்ந்து எனக்கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டா ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளி
கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் களைந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரந்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடபிங் கலையின் எழுத்து அறிவித்துக்
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழும்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முகலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்திஎன் செவியில்
எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்து அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - பூஜையில் நிம்மத, நெஞ்சமே, வேங்க, காட்டி, டமடை, நின்ற, வாழி, புத்தகங்கள், நின், நிலையும், கடமடை, அர்த்தமுள்ள, வேங், நிம்மத, பூஜையில் , வன்திரு, அறுத்தே, தன்னை, இந்துமதம், வாழ்வே, மாணிக்கமே, களைந்து, காட்டிச், வடிவுடை, அங்குச, மங்கை, மூன்று, என்னை, எனக்குத், இனிதெனக்கு, வாயில், கரத்தின், னுள்ளே, அறிவித்து, கருத்து, மயக்கம், செவியில், வார்பொழில், அருளி, யெம்பிரான், போற்றி, யென், செங்க, யல்திளைக், அருள்தரும், காவா, சிறந்த, பூவாய், பாவாய், கும்சு, னைத்திரு, தீர்த்த, சோலை, மேழு, மேவிய, லைத்திரு, பள்ளி, வெந்தை, வண்ண, வாங்கிப்