அர்த்தமுள்ள இந்துமதம் - சமதர்மம்
மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும் என்பதற்காக, அரசாங்கத்தார் அநேக திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டிலும் தரித்திரம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைத்தரம் உயர்வது என்றால் ஒருவன் இரண்டு வேளை காப்பி சாப்பிடுவது, நான்கு வேளையாக வேண்டும்; இரண்டு வேஷ்டி வைத்துக் கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற அபிப்பிராயம் வளர்ந்தால், அது பெரிய தப்பு. வாழ்க்கைத் தரம் உயர்வது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகள் நாளுக்குநாள் மனுஷர்களுக்கு அதிகமாகிக் கொண்டே போனால், நாட்டில் தரித்திரம்தான் மிஞ்சும்.
மனுஷ்யர்களுக்கு மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக் கொள்ள மிக மிக அத்தியாவசியமானவை எவையோ அவை நாட்டில் உள்ள அத்தனை ஜனங்களுக்கும் கிடைக்கவேண்டும். அதற்குத்தான் திட்ட ஒழுங்கு எல்லாம் வேண்டும். அப்படி வாழவேண்டுமானால், வசதி உள்ளவர்கள்கூட, நாட்டில் இருக்கும்படியான பரம ஏழை எப்படி வசிக்கிறானோ அப்படி வசிக்கப் பிரயத்தனம் பண்ணவேண்டும். சவுகரியம் இருக்கிறவர்களும்கூடத் தங்களிடம் பணம் இருக்கிறது என்று தேவைக்குமேல் அதிகமான வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முடியாமல் இருக்க வேண்டும்.
வசதி இருக்கிறது என்று இவர்கள் பண்ணுகிற காரியங்கள் எல்லாம், அபரிக்ரகம் என்பதற்கு விரோதம்தான். இந்தத் தோஷம் வந்துவிட்டால் ஈசுவரானுக்ரகம் கிடையாது. மனுஷ்ய ஜென்மம், பிரயோஜனம் உள்ளதாக ஆக வேண்டுமானால், நமக்கு எவ்வளவு தேவையோ அதற்கு மேல் ஓர் இம்மிகூட விரும்பக்கூடாது. வசதி இருக்கிறது என்றால், அதைக்கொண்டு கஷ்டப்படுகிற இதர குடும்பங்களுக்கு அந்தக் குறைச்சலான வசதியைக்கூடப் பெற முடியாதவர்களுக்கு உதவி செய்வதுதான் புண்ணியம். இதுதான் அவனுக்கு மோட்சத்தை அளிக்கும்.
இது தெரியாமல், வசதி இருக்கிறவர்கள், தேவைக்கு மேல் பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி என்கிற தோஷத்தை அதிகமாக இப்போது பண்ணிக் கொண்டிருக்கிறது, ஒரு பக்கம்; அந்தச் சமயம் இவர்களைப் பார்த்து வசதி இல்லாதவர்களும் கூட கடன் வாங்கியாவது அவற்றை வாங்கவேண்டும் என்று கடனாளியாகி அநேக உபத்திரவங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
பட்டுப்புடவையைப் போலத்தான் வைர ஆபரணங்களில் உள்ள ஆசை. இதில் போடுகிற பணம் வீண்.
`கந்யாம் கநக ஸம்பந்தாம்’ என்று பெண்ணைக் கொடுக்கும்போது `ஸ்வர்ணம்’ கொடுப்பது என்கிற வழக்கம் இருந்திருக்கிறது. தங்கத்தில் போடுகிற பணமாவது பிரயோஜனப்படுகிறது. வைரத்தில் பிரயோஜனம் இல்லை. உபத்திரவம் இருக்கிறது.
ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் எல்லாம் யாரும் காப்பி சாப்பிட்டது இல்லை. குடிசையில்தான் இருந்தார்கள். காதில் பனை ஓலைதான் போட்டுக் கொண்டிருந்தார்கள். கேழ்வரகுக் கூழோ, கஞ்சியோதான் சாப்பிட்டார்கள். ஏழைகளோ, பணக்
காரர்களோ எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்கள். நாம் பட்டுத்துணி உடுப்பது இல்லை. காப்பி குடிப்பது இல்லை என்று சங்கல்பம் செய்துகொண்டு விட்டால் இப்போது ஒரு குடும்பத்துக்குச் செலவாகிறதைக் கொண்டு, ஐந்து குடும்பங்கள் வாழ முடியும். தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி ஏற்படாது, சவுக்கியம் ஏற்படாது. தரித்திரம், துக்கம் எல்லாந்தான் உண்டாகும்.
பட்டுப் புடவையில் காசு போடவில்லை என்றால், காப்பிக் கொட்டையில் காசு போடவில்லை என்றால், எல்லாக் குடும்பங்களும் முன்னுக்கு வந்துவிடும். குடும்ப சவுகரியத்திற்காக மட்டும் சொல்லவில்லை. பட்டுப்புடவையினால் வருகிற பாவங்கள் நமக்கு இல்லை என்றால், மோட்சத்திற்குச் சிரமங்களே இல்லாமல் போகும். அஷ்டாங்க யோகத்தின் முதல் அங்கமே அஹிம்சை, அபரிக்ரகம் இவை எல்லாம்தான். ஒரு பிராணிக்குக்கூட நம்மால் ஹிம்சை உண்டாகக் கூடாது. நம்முடைய தேவைக்கு மேல் ஒரு துரும்பைக்கூட, வசதி இருக்கிறது, பணம் இருக்கிறது என்பதற்காக வாங்கிக்கொள்ளக் கூடாது. பணம் இருக்கிறது என்றால், இன்னும் சில குடும்பங்களுக்கு உதவி செய்யலாம். இப்படிச் செய்தால்தான், செய்வதற்குப் பிரயத்தனமாவது செய்தால்தான் சீக்கிரத்திலே பிரம்ம சாட்சாத்காரத்தைப் பெற முடியும். அஷ்டாங்க யோகத்தின் முதல்படியே இதுதான். முதல் படியை மிதிக்காமல் மேல்படிக்குப் போக முடியாது என்பதற்காக இதைச் சொன்னேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - சமதர்மம், என்றால், இருக்கிறது, இல்லை, வசதி, வேண்டும், வேஷ்டி, புத்தகங்கள், பட்டுப்புடவை, ஹிம்சை, பணம், எல்லாம், என்பதற்காக, நாம், காப்பி, மேல், என்கிற, நமக்கு, இரண்டு, இந்துமதம், வாழ்க்கைத், நாட்டில், சமதர்மம், அர்த்தமுள்ள, அஹிம்சை, இருக்க, குடும்பங்களுக்கு, எவ்வளவு, பட்டு, போடவில்லை, காசு, ஏற்படாது, அஷ்டாங்க, உள்ள, கொள்ள, கூடாது, முடியும், அப்படி, அபரிக்ரகம், யோகத்தின், இப்போது, தேவைக்கு, போடுகிற, பிரயோஜனம், இதுதான், செய்தால்தான், இருந்தார்கள், உதவி, இல்லாத, அதனால், முடியாது, அந்தக், ஐந்து, கொண்டு, கொண்டால், சிறந்த, மானத்தைக், அதற்கு, அணிந்து, பாவம், வருகிறது, போட்டுக், தரித்திரம், கொண்டிருக்கிறது, உயர்வது, அநேக, உடுத்திக், ஜீவன்களுக்கு, சொல்லிக்கொண்டு, சாப்பிடுவது, வருகிற, வைத்துக்