அணில் - விலங்குகள்
வால் அடர்த்தியான முடிகளுடன் மென்மையாக இருக்கும். சிறிய கால்களுடன் மரங்களில் ஏறுவதற்கு வசதியாக கூர்மையான நகங்கள் இருக்கும். இவற்றின் முன்பற்கள் சற்று பெரியதாக கூர்மையாக இருக்கும். அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை. கொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும். இவை 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அணிலகளின் தோல் மற்றும் மயிர்க்கால்கள், வெளிநாட்டவரின் நாகரீகத் தொப்பிகள், அங்கிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. தென் அமெரிக்காவில் பிரதான தொழிலான "அணில்களைக் கொல்லுதல்" நிறைய வருமானம் ஈட்டும் தொழிலாகக் கருதப்படுகின்றன. எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்து வருவதைக் கண்ட ஐ.நா. சபை, இவைகளை வேட்டையாடுவதைத் தேசியக் குற்றமாக அறிவித்துள்ளது. இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, குட்டி அணில்களை எங்கு பிடிப்பது, எப்படிக் கொன்று அதன் தோல்களைப் பதப்படுத்துவது என்பன போன்ற பயிற்சிப் பட்டறைகள் நிறைய நடத்தப்படுகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணில் - Squirrel : விலங்குகள், Animals, அடிப்படைத் தகவல்கள், Basic Information