புறநானூறு - 94. சிறுபிள்ளை பெருங்களிறு!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை.
துறை: அரச வாகை.
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின், நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன் துன்னருங் கடாஅம் போல இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே. |
5 |
பெரும! நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன்மீது ஊர்ந்துவந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம்போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் போலக் கொடுமையானவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 94. சிறுபிள்ளை பெருங்களிறு!, இலக்கியங்கள், பெருங்களிறு, பெரும, புறநானூறு, சிறுபிள்ளை, வாகை, எட்டுத்தொகை, சங்க