புறநானூறு - 88. எவருஞ் சொல்லாதீர்!
பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி.
திணை; தும்பை.
துறை; தானை மறம்.
யாவிர் அயினும், கூழை தார்கொண்டு யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்; ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன், கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின் விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே. |
5 |
88 நீவிர் யாராக இருந்தால் என்ன? உங்களைப் பின் தொடர்ந்து வரும் கூழைப்படையை வைத்துக்கொண்டு போரிட்டு வெல்வோம் என்று முனைவதை விட்டுவிடுங்கள். என் தலைவன், ஒளிரும் உயர்ந்த வேல்மழவர் (மறவர்) பின்னணி கொண்ட பெருமகன். முழவு போன்ற மார்பினைக் கொண்டவன். முழவு - விழாக்காலத்தில் நன்முழக்கத்துக்குப் பயன்படும் முழவு. மார்பு – ஒளி வீசும் அணிகலன் பூண்ட மார்பு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 88. எவருஞ் சொல்லாதீர்!, இலக்கியங்கள், எவருஞ், புறநானூறு, சொல்லாதீர், முழவு, மார்பு, சங்க, எட்டுத்தொகை, பெருமகன்