புறநானூறு - 56. கடவுளரும் காவலனும்!
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை : பூவை நிலை.
ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை, |
5 |
விண்ணுயர் புல்கொடி, விறல்வெய் யொனும், மணி மயில் உயரிய மாறா வென்றிப், பிணிமுக ஊர்தி, ஒண்செய் யோனும்_என ஞாலம் காக்கும் கால முன்பின், தோலா நல்இசை, நால்வர் உள்ளும், |
10 |
கூற்றுஒத் தீயே, மாற்றருஞ் சீற்றம்; வலிஒத் தீயே, வாலி யோனைப்; புகழ்ஒத் தீயே, இகழுநர் அடுநனை; முருகுஒத் தீயே, முன்னியது முடித்தலின்; ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின், யாங்கும் |
15 |
அரியவும் உளவோ, நினக்கே? அதனால், இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா, யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனை கலத்து ஏந்தி, நாளும் ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ்சிறந்து, |
20 |
ஆங்கினிது ஒழுகுமதி! ஓங்குவாள் மாற! அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத் தண்கதிர் மதியம் போல்வும், நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! |
25 |
எனவே இரப்போருக்கு வேண்டிய பொருள்களைக் குறைவின்றி வழங்குவாயாக. யவனர் தந்த பொன்-கிண்ணத்தில் மகளிர் நாள்தோறும் ஊட்டும் தேறலை உண்டு மகிழ்ந்து இனிதாக வாழ்வாயாக. வாளோங்கிய மாறனே! இருளகற்றும் சூரியன் போலவும், மேற்குத் திசைநில் காணப்படும் வளர்பிறை நிலாப் போலவும் நிலைபேற்றுடன் உலகில் வாழ்வாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 56. கடவுளரும் காவலனும்!, தீயே, இலக்கியங்கள், கடவுளரும், போலவும், காவலனும், புறநானூறு, தந்த, யவனர், மகளிர், வாழ்வாயாக, புரையும், எட்டுத்தொகை, சங்க, உயரிய, மேனி, யோனும்