புறநானூறு - 54. எளிதும் கடிதும்!
பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை.
திணை: வாகை.
துறை : அரசவாகை.
எங்கோன் இருந்த கம்பலை முதூர், உடையோர் போல இடையின்று குறுகிச், செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல் எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே; இரவலர்க்கு எண்மை யல்லது; புரவு எதிர்ந்து |
5 |
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு ஆனாது ஈயும் கவிகை வண்மைக் கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப், பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி, |
10 |
மாசுண் உடுக்கை, மடிவாய், இடையன் சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே. |
வெண்ணெய் திருடி உண்ட கண்ணன் மேல் களவு ஏது? கண்ணன் பாம்பின் மீது ஏறிப் பாற்கடல் அலையில் துயின்றான். அரன் வேணியான். பெண்ணைத் தலையில் சுமந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 54. எளிதும் கடிதும்!, இலக்கியங்கள், எளிதும், புறநானூறு, கடிதும், இரவலர்க்கு, கண்ணன், சங்க, எட்டுத்தொகை, கோதை