புறநானூறு - 360. பலர் வாய்த்திரார்!
பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரியர்
திணை: காஞ்சி
துறை: பெருங்காஞ்சி
பெரிது ஆராச் சிறு சினத்தர், சில சொல்லால் பல கேள்வியர், நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர் கலுழ் நனையால் தண் தேறலர், கனி குய்யாற் கொழுந் துவையர், |
5 |
தாழ் உவந்து தழூஉ மொழியர், பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி ஏம மாக இந்நிலம் ஆண்டோர் சிலரே; பெரும! கேள் இனி ; நாளும், பலரே தகை அது அறியா தோரே! |
10 |
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால் நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப் பாறுஇறை கொண்ட பறந்தலை, மாகத |
15 |
கள்ளி போகிய களரி மருங்கின், வெள்ளில் நிறுத்த பின்றைக் , கள்ளொடு புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி, புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு, அழல்வாய்ப் புக்க பின்னும், |
20 |
பலர்வாய்த்து இராஅர், பகுத்துஉண் டோரே. |
சினத்தைப் பெருக விடாமல் சினம் காட்டவேண்டும்.சில சொற்களால் சுருக்கமாகப் பேசவேண்டும்.பலவாக விரித்துச் சொல்வனவற்றையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அவற்றின் பொருளை நுட்பமாக உணர்ந்துகொள்ள வேண்டும். பெருமளவில் கொடை நல்க வேண்டும். அடியில் கலங்கிப் படிந்துள்ள நனைச் சாற்றினையும், பழம் ஊறிய குளுமையான தேறல்-சாற்றினையும் பருகத் தரவேண்டும்.நெய் கனியக் கனியக் ‘குய்’ என்று தாளிக்கப்பட்ட துவையலை அந்தப் பருகுநீருடன் தரவேண்டும். தாழ்மையாகப் பேச வேண்டும்.எதிர்த்துப் பேசாமல் தழுவிப் பேச வேண்டும்.இப்படி நடந்துகொண்டால் பலருக்கும் பயன் விளையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 360. பலர் வாய்த்திரார்!, வேண்டும், இலக்கியங்கள், புறநானூறு, வாய்த்திரார், பலர், சங்க, கனியக், தரவேண்டும், பயன், எட்டுத்தொகை, சாற்றினையும்