புறநானூறு - 317. யாதுண்டாயினும் கொடுமின்!
பாடியவர்: மவேம்ப்ற்றூர்க் குமரனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
வென்வேல் .. .. .. .. .. .. நது முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு அதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும், யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே; வேட்கை மீளப .. .. .. .. .. .. |
5 |
.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும், யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே. |
கள்ளுண்ட மயக்கத்தில் வெற்றி வேலுடன் முற்றத்தில் கிடக்கும் இந்த வல்லாளனுக்குத் தோல் இருந்தாலும், பாய் இருந்தாலும், எது இருந்தாலும் உடனடியாகப் படுப்பதற்குக் கொடுங்கள். அன்று இவன் எமக்கும், பிறர்க்கும், யாராயினும் கள் தந்து களைப்புத் தீரத் தூங்கவைத்தவன் ஆயிற்றே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 317. யாதுண்டாயினும் கொடுமின்!, இலக்கியங்கள், கொடுமின், யாதுண்டாயினும், இருந்தாலும், புறநானூறு, பிறர்க்கும், எமக்கும், சங்க, எட்டுத்தொகை, ஆயினும்