புறநானூறு - 302. வேலின் அட்ட களிறு?
பாடியவர்: வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்).
திணை: தும்பை
துறை : குதிரை மறம்
வெடிவேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும், மாவே; பூவே, விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட; நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் |
5 |
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய, நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், விண்ணிவர் விசும்பின் மீனும், |
10 |
தண்பெயல் உறையும், உறையாற் றாவே. |
காளையின் குதிரை மூங்கில் வெடிப்பது போல ‘டப், டப்’ என்று தாவித் துள்ளிப் பாய்ந்தது. (வளைத்து விட்ட மூங்கில் விசிவது போலத் தாவிப் பாய்ந்தது எனக் காட்டுகிறது, பழைய உரை) காளையின் ஊர் கரம்பு நிலம். என்றாலும் வறுமை (நிரப்பு < நிரம்பு) இல்லாத ஊர். பாணர் வாழும் ஊர். நரந்தம் பூப் பூத்திருக்கும் கொடியை யாழின் வளைவுக் கோட்டில் சுற்றிக்கொண்டு இசை கூட்டும் பாணர் வாழும் ஊர். விருதாகப் பெற்ற பொற்றாமரைப் பூவைக் கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் பாணர்-மகளிர் வாழும் ஊர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 302. வேலின் அட்ட களிறு?, இலக்கியங்கள், வேலின், களிறு, அட்ட, பாணர், வாழும், புறநானூறு, மூங்கில், பாய்ந்தது, காளையின், காமக், எட்டுத்தொகை, சங்க, குதிரை, மகளிர்