புறநானூறு - 298. கலங்கல் தருமே!
298. கலங்கல் தருமே!
'எமக்கே கலங்கல் தருமே தானே தேறல் உண்ணும் மன்னே : நன்றும் இன்னான் மன்ற வேந்தே; இனியே_ நேரார் ஆரெயில் முற்றி, வாய் மடித்து உரறி, நீ முந்து? என் னானே. |
5 |
தேறல் கள்ளை அரசன் மட்டும் உண்கிறான். பகைவர் கோட்டையை முற்றுகை இட்டுக்கொண்டிருக்கையில் தன் வாயை மடித்து உருமுகிறான். மறக்குடி மகன் ஒருவனை “நீ முந்திச் செல்” என உருமுகிறான். இந்த அரசன் கொடியவன். கோட்டை முற்றுகையைக் கூறும் இந்தப் பாடலை – கரந்தை நெடுமொழி எனத் – திணை-துறை பகுத்தவர் குறிப்பிடுவது எதனால் என விளங்கவில்லை
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 298. கலங்கல் தருமே!, கலங்கல், தருமே, இலக்கியங்கள், புறநானூறு, அரசன், உருமுகிறான், மடித்து, சங்க, எட்டுத்தொகை, தேறல்