புறநானூறு - 293. பூவிலைப் பெண்டு!
பாடியவர்: நொச்சி நியமங்கிழார்
திணை: காஞ்சி
துறை: பூக்கோட் காஞ்சி
நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன் குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின், எம்மினும் பேர்எழில் இழந்து, வினை எனப் பிறர்மனை புகுவள் கொல்லோ? |
5 |
அளியள் தானே, பூவிலைப் பெண்டே! |
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் = நெஞ்சை நிமிர்த்திப் போரிடுவோருக்குத் தளராது யானைமேலிருந்து தாக்கும் வேந்தன், குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை – குறுநில மன்னன் பணிந்து பெண்ணைத் தந்துவிட வேண்டும் என்று முழக்கும் தண்ணுமையானது, நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் = எதிர்த்துத் தாக்காமல் நாணம் கொண்டு அமைவோர்க்கு ஒலிக்குமாயின், எம்மினும் பேர் எழில் இழந்து = புலவர் கூறுகிறார், தன்னைக்காட்டிலும் அழகிழந்து, வினை என = தலைவிதியே என்று, பிறர்மனைப் புகுவள் கொல்லோ = மறக்குடி மகன் அல்லாத வேந்தனாகிய பிறர் மனை புகுவாளோ, பூவிலைப் பெண்டு = வேந்தன் தரும் பூவிலையைப் பெற்றுக்கொண்டு எனப் பாடலில் உள்ளவாறு பொருளமைதி கண்டுகொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 293. பூவிலைப் பெண்டு!, பூவிலைப், இலக்கியங்கள், பெண்டு, புறநானூறு, எம்மினும், இரங்கும், இழந்து, ஆயின், புகுவள், வேந்தன், கொல்லோ, மாக்கட்கு, எனப், வினை, எறியும், காஞ்சி, சங்க, எட்டுத்தொகை, ஒல்கா, யானை, ஏவல், குறும்பர்க்கு, மேலோன், தண்ணுமை