புறநானூறு - 253. கூறு நின் உரையே!
பாடியவர்: குளம்பாதாயனார்
திணை: பொதுவியல்
துறை: முதுபாலை
என்திறத்து அவலம் கொள்ளல், இனியே; வல்வார் கண்ணி இளையர் திளைப்ப, நாகாஅல் என வந்த மாறே, எழாநெல் பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின், வளைஇல், வறுங்கை ஓச்சிக், |
5 |
கிளையுள்ஒய்வலோ? கூறுநின் உரையே! |
இதனை முதுபாலை என்று குறிப்பிட்டுள்ளனர். காம்பார்க் கடத்திடைக் கணவனை இழந்த, பூங்கொடி அரிவை புலம்பு உரைத்தன்று – என்று புறப்பொருள் வெண்பாமாலை 254 குறிப்பிடுகிறது. “நான் இறந்துவிட்டேன் என்று எனக்காக அவலம் கொள்ளாதே. இனி, நிறைந்த அழகிய பூச்சூடிய இளைய தோழிமார் திளைத்து மகிழும்படி நகைமுகத்துடன் விளையாடுக” – என்று உன் வாயிலிருந்து சொற்கள் வருகின்றனவே – (இது சரியன்று) மூங்கிலில் மூங்கில்நெல் விளையும். நெல் விளையாத மூங்கில் போன்றது என் கை. அதிலும் அந்த மூங்கிலானது தோல் உரிந்து வெள்ளை நிறத்துடன் (விளர்ப்பு) காணப்படுவது போல என் கை ஆகும். வளையல் இல்லாத வறுங்கை ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 253. கூறு நின் உரையே!, உரையே, இலக்கியங்கள், கூறு, புறநானூறு, நின், வறுங்கை, அவலம், ஆகும், சங்க, எட்டுத்தொகை, முதுபாலை