புறநானூறு - 241. விசும்பும் ஆர்த்தது!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார் அண்டிரன் வரூஉம் என்ன, ஒண்தொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள், போர்ப்புறு முரசும் கறங்க, ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே. |
5 |
தன்னிடம் உதவி வேண்டிவந்த இரவலர்களுக்கெல்லாம் வலிமை மிக்க தேரிலேற்றி உதவிப் பொருள்களை வழங்கிய அண்டிரன் வருவான் என்று வச்சிரத் தடக்கை நெடியோன் (இந்திரன்) கோயிலுக்குள் அவனை வரவேற்கும் முரசு முழக்கம் வானத்தில் எழுகின்றது
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 241. விசும்பும் ஆர்த்தது!, இலக்கியங்கள், விசும்பும், புறநானூறு, ஆர்த்தது, தடக்கை, நெடியோன், வச்சிரத், சங்க, எட்டுத்தொகை, அண்டிரன்