புறநானூறு - 193. ஒக்கல் வாழ்க்கை!
பாடியவர்: ஓரேருழவர்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின் ஒருவன் ஆட்டும் புல்வாய் போல, ஓடி உய்தலும் கூடும்மன்; ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே. |
னருடன் வாழும் இல்லற வாழ்க்கையானது வேட்டைக்காரன் களர்நிலத்தில் துரத்தும் மான் படும் துன்பம் போல இடர்ப்பாடு உடையதுதான். என்றாலும் அதிலிருந்து அவன் தப்பமுடியாது. அதள் = தோல்பறை எறிதல் = அடித்தல் களர்நிலம். நீண்ட களர்நிலம். வெண்ணிறக் களர்நிலம். களர்நிலம் என்பது நேற்றுநிலம். அந்த நிலத்தில் வேடன் ஒருவன் புல்லுண்ணும் புல்வாய் மானை வேட்டையாடத் துரத்துகிறான். அந்த மான் அவனிடமிருந்து தப்பிப் பிழைக்கவும் முடியும். இதனை ஒருவன் என்னிப் பார்க்கிறான். தட்குதல் = தளையாய் அமைதல் அவனுக்கு மான் களரில் ஓடுவது போன்ற துன்பம். ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். மனைவி, மக்கள் போன்ற ஒக்கல் வாழ்க்கையால் துன்பம். அவனால் தப்பிப் பிழைக்க முடியவில்லை. ஒக்கல்-வாழ்க்கை அவனுக்குத் தளை. துன்பப் பட்டேனும் அவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும். இதுதான் வாழ்க்கை. மாட்டைத் தளைக்கயிற்றில் கட்டி வைத்திருப்பர். தளைதல் = கட்டுதல் பாடலில் இரண்டு சீர்களைக் கட்டிப்போடுதல் தளை. மனைவி மக்களைது துன்பப்பட விட்டுவிட்டுத் துறவு பூணுதல் கூடாது என்கிறது, இந்தப் பாடல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 193. ஒக்கல் வாழ்க்கை!, ஒக்கல், வாழ்க்கை, துன்பம், களர்நிலம், இலக்கியங்கள், மான், புறநானூறு, ஒருவன், மனைவி, வாழ்க்கையால், தப்பிப், புல்வாய், எட்டுத்தொகை, சங்க, அந்த