புறநானூறு - 187. ஆண்கள் உலகம்!
பாடியவர்: அவ்வையார்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்.)
நாடா கொன்றோ ; காடா கொன்றோ; அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ; எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை ; வாழிய நிலனே! |
நாடாய் இருந்தால் என்ன? காடாய் இருந்தால் என்ன? பள்ளமாய் இருந்தால் என்ன? மேடாய் இருந்தால் என்ன? எங்கே ஆண்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்த நிலம் வாழ்வதற்கு உரிய நல்ல இடம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 187. ஆண்கள் உலகம்!, இலக்கியங்கள், கொன்றோ, ஆண்கள், என்ன, இருந்தால், உலகம், புறநானூறு, சங்க, எட்டுத்தொகை