புறநானூறு - 129. வேங்கை முன்றில்!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
சிறப்பு : தேறலுண்டு குரவை ஆடுதல்; பரிசிலர்க்கு யானைகளை வழங்கல்.
குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள் வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, வேங்கை முன்றில் குரவை அயரும், தீஞ்சுளைப் பலவின், மாமலைக் கிழவன்; ஆஅய் அண்டிரன், அடுபோர் அண்ணல்; |
5 |
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவின்று, வானம் மீன்பல பூப்பின், ஆனாது ஒருவழிக் கருவழி யின்றிப் பெருவெள் ளென்னிற், பிழையாது மன்னே. |
ஆய் அண்டிரன் இரவலர்களுக்கு வழங்கிய யானையின் எண்ணிக்கைக்கு வானில் பூத்துக்கிடக்கும் மீனின் எண்ணிக்கையும் ஈடாக முடியாது. அவன் நாட்டில் பலா மரங்கள் மிகுதி. குறி-இறைக் குரம்பைகளில் வாழும் அவன் நாட்டுக் குறவர் மக்கள் மூங்கிலில் பழுக்க வைத்த தேறல்-கள்ளைப் பருகி, வேங்கை மர முற்றத்தில் குரவை ஆடிவர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 129. வேங்கை முன்றில்!, வேங்கை, இலக்கியங்கள், முன்றில், புறநானூறு, குரவை, அண்டிரன், யானையின், அவன், தேறல், குறவர், எட்டுத்தொகை, சங்க