புறநானூறு - 127. உரைசால் புகழ்!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: வேள் ஆய் அரண்டின்.
திணை: பாடாண்.
துறை: கடைஇநிலை.
களங் கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ்ப் பாடு இன் பனுவல் பாணர் உய்த்தெனக், களிறில வாகிய புல்லரை நெடுவெளிற், கான மஞ்ஞை கணனுடு சேப்ப, ஈகை அரிய இழையணி மகளிரொடு |
5 |
சாயின்று என்ப, ஆஅய் கோயில்; சுவைக்கு இனி தாகிய குய்யுடை அடிசில் பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி, உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய முரைசு கெழு செல்வர் நகர்போ லாதே. |
10 |
ஆய் அரசன் தாலி அணிந்த தன் மகளிரோடு வாழ்கிறான். அவனிடமுள்ள யானைகளை யாழ் மீட்டிப் பாடும் பாணர்கள் கொண்டுசென்றுவிட்டதால் அவனது கோயில் அரண்மனையில், யானை கட்டும் வெளில் தறியில் யானை இல்லை. – இவ்வாறு கூறுகிறார்கள். முரசு முழங்கும் செல்வம் படைத்தவர் தாளித்து மணக்கும் உணவைப் பிறருக்கு வழங்காமல் தம் வயிற்றுப் பசித் தீ தணிய உண்பது போல் இந்த ஆய் அரசன் இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 127. உரைசால் புகழ்!, உரைசால், இலக்கியங்கள், புறநானூறு, புகழ், யானை, இல்லை, அரசன், சங்க, எட்டுத்தொகை, கோயில்