புறநானூறு - 123. மயக்கமும் இயற்கையும்!
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி.
திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.
நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே; தொலையா நல்லிசை விளங்கு மலயன் மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் பயன்கிழு முள்ளூர் மீமிசைப் |
5 |
பட்ட மாரி உறையினும் பலவே. |
கள்ளும், மகிழும் உண்டு மகிழ்ந்திருக்கும் போது தன் தேரைப் பிறருக்குக் கொடையாக வழங்குதல் என்பது எல்லார்க்கும் எளிது. தான் உண்டு மகிழாமல் காரி மன்னன் அணிகலன்கள் ஏற்றி வழங்கிய தேர் அவனது முள்ளூரில் பெய்த மழைத்துளிகளைக் காட்டிலும் அதிகம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 123. மயக்கமும் இயற்கையும்!, இலக்கியங்கள், மயக்கமும், புறநானூறு, உண்டு, இயற்கையும், தேர், எட்டுத்தொகை, சங்க