புறநானூறு - 111. விறலிக்கு எளிது!
பாடியவர்: கபிலர்,
பாடப்பட்டோன்: வேள் பாரி.
திணை: நொச்சி.
துறை: மகள் மறுத்தல்.
சிறப்பு: பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.
அளிதோ தானே, பேரிருங் குன்றே! வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; நீலத்து, இணை மலர் புரையும் உண்கண் கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே. |
பறம்பு மலை இப்போது பெரிதும் இரக்கம் கொள்ளளத் தக்க நிலையில் உள்ளது. அதனை மூவேந்தரும் சேர்ந்து முற்றுகை இட்டிருக்கின்றனர். அவர்களின் வேல்-படையால் பறம்புமலை வேந்தனை வெல்ல முடியாது. என்றாலும் பறம்பு மலையைக் கிணை முழக்கத்துடன் பாடிக்கொண்டு செல்லும் விறலி அதனை தானமாகப் பெற்றுக்கொள்ளமுடியும். அவளுக்கு எளிது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 111. விறலிக்கு எளிது!, இலக்கியங்கள், எளிது, விறலிக்கு, புறநானூறு, கிணை, பறம்பு, எட்டுத்தொகை, சங்க