பரிபாடல் - 9. செவ்வேள்
கடவுள் வாழ்த்து
பாடியவர் :: குறும்பூதனார்
இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார்
பண் :: பாலையாழ்
முருகவேளை வாழ்த்துதல்
இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி, அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும், உருமுச் சூழ் சேண் சிமை___உயர்ந்தவர் உடம்பட_____ எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப, |
5 |
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ. மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று, ஐ-இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண், மணி மழை தலைஇயென, மா வேனில் கார் ஏற்று, |
10 |
தணி மழை தலையின்று, தன் பரங்குன்று. |
தமிழது சிறப்பிற்குக் காரணம்
நான்மறை விரித்து, நல் இசை விளக்கும் வாய்மொழிப் புலவீர்! கேண்மின், சிறந்தது; காதற் காமம், காமத்துச் சிறந்தது; விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி: |
15 |
புலத்தலின் சிறந்தது, கற்பே; அது தான் இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப் பரத்தை உள்ளதுவே: பண்புறு கழறல், தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறையதுவே; |
20 |
கேள் அணங்குற மனைக் கிளந்துள, சுணங்கறை; சுணங்கறைப் பயனும் ஊடலுள் ளதுவே. அதனால், அகறல் அறியா அணி இழை நல்லார் இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர்; இத் தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் |
25 |
கொள்ளார், இக் குன்று பயன். |
வள்ளியும் முருகனும் சிறந்தவாறு
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி, புனல் தந்த காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின், கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ, 'வாழிய, மாயா! நின் தவறு இலை; எம் போலும் |
30 |
கேழ் இலார்____ மாண் நலம் உண்கோ, திரு உடையார் மென் தோள்மேல் அல்கி நல்கலம் இன்று?____ வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப் பெய்ய உழக்கும், மழைக் கா; மற்று ஐய!' கரையா வெந் நோக்கத்தான் கை சுட்டி, பெண்டின் |
35 |
இகலின் இகந்தாளை, அவ் வேள் தலைக் கண்ணி திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை, 'வருந்தல்' என, அவற்கு மார்பு அளிப்பாளை, 'குறுகல்' என்று ஒள்ளிழை கோதை கோலாக இறுகிறுக யாத்துப் புடைப்ப; |
40 |
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல, இருவர் வான் கிளி ஏற்பில் மழலை, செறி கொண்டைமேல் வண்டு சென்று பாய்ந்தன்றே, வெறி கொண்டான் குன்றத்து வண்டு. |
வள்ளியின் பாங்கியரும் தேவசேனையின் பாங்கியரும் இகழ்தல்
தார் தார் பிணக்குவார்; கண்ணி ஓச்சித் தடுமாறுவார்; | 45 |
மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்; கோதை வரிப் பந்து கொண்டு எறிவார்____ பேதை மட நோக்கம் பிறிதாக, ஊத நுடங்கு நொசி நுசுப்பார்______நூழில் தலைக்கொள்ள: கயம்படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார்; |
50 |
வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார் தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார் வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார் வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் தோள் வளை ஆழி சுழற்றுவார்___ |
55 |
மென் சீர் மயில் இயலவர் வாள் மிகு வய மொய்ம்பின் வரை அகலத்தவனை____வானவன் மகள் மாண் எழில் மலர் உண்கண் மட மொழியவர் ____உடன் சுற்றி, |
60 |
கடி சுனையுள் குளித்து ஆடுநரும், அறை அணிந்த அருஞ் சுனையான் நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும், சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும்; கோகுலமாய்க் கூவுநரும், |
65 |
ஆகுலம் ஆகுநரும்____ குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் வித்தகத் தும்பை விளைத்தலான், வென் வேலாற்கு ஒத்தன்று, தண் பரங்குன்று. |
வாழ்த்தி வேண்டல்
கடுஞ் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் | 70 |
அடும் போராள! நின் குன்றின்மிசை ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும், பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும், வல்லாரை வல்லார் செறுப்பவும், அல்லாரை அல்லார் செறுப்பவும், ஓர் சொல்லாய், |
75 |
செம்மைப் புதுப் புனற் தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர், படாகை நின்றன்று; மேஎ எகினவை; வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை; |
80 |
கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை நயத் தகு மரபின் வியத் தகு குமர! வாழ்த்தினேம் பரவுதும், தாழ்த்துத் தலை, நினை யாம்____ நயத்தலின் சிறந்த எம் அடியுறை, பயத்தலின் சிறக்க, நாள்தொறும் பொலிந்தே. |
85 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிபாடல் - 9. செவ்வேள், செறுப்பவும், இலக்கியங்கள், தார், தோள், செவ்வேள், சிறந்தது, உண்கண், மலர், பரிபாடல், மார்பு, கோதை, கண்ணி, ஒருவர், பாங்கியரும், ஆடுநரும், வருவார், மென், வண்டு, மயில், ஆரத்து, மகள், தமிழ், சங்க, எட்டுத்தொகை, பரங்குன்று, விரித்து, நின், கேழ், தவறு, பரத்தை, மாண்