பரிபாடல் - 21. செவ்வேள்
பாடியவர் :: நல்லச்சுதனார்
இசையமைத்தவர் :: கண்ணகனார்
பண் :: காந்தாரம்
கடவுள் வாழ்த்து
பரங்குன்றத்துப் பெருமானைப் பரவுதல்
ஊர்ந்ததை--எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி, பொரு சமம் கடந்த புகழ் சால், வேழம். தொட்டதை--தைப்பு அமை சருமத்தின், தாள் இயை தாமரை துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய, வெரிநத் தோலொடு, முழு மயிர் மிடைந்த, |
5 |
வரி மலி அர உரி வள்பு கண்டன்ன, புரி மென் பீலிப் போழ் புனை அடையல். கையதை--கொள்ளாத் தெவ்வர் கொள் மாமுதல் தடிந்து, புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்; பூண்டதை--சுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த |
10 |
உருள் இணர்க் கடம்பின் ஒன்ணுபடு கமழ் தார். அமர்ந்ததை--புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி, நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப் பாலை அரை வரை மேகலை, அளி நீர்ச் சூழி, தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம். |
15 |
'குன்றத்து அடி உறை இயைக!' எனப் பரவுதும்-- வென்றிக் கொடி அணி வெல்வ! நிற் தொழுது. |
பரங்கின்றின்மேல் ஓவியத்தின் அழகு போன்ற காட்சிகள்
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப, துடியின் அடி பெயர்த்து, தோள் அசைத்துத் தூக்கி, அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின், |
20 |
நுனை இலங்கு எ·கெனச் சிவந்த நோக்கமொடு துணை அணை கேள்வணைத் துனிப்பவள் நிலையும்; நிழல் காண் மண்டிலம் நோக்கி, அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும்; பொதிர்த்த முலையிடைப் பூசிக் சந்தனம் |
25 |
உதிர்த்து, பின் உற ஊட்டுவாள் விருப்பும்; பல் ஊழ் இவை இவை நினைப்பின், வல்லோன் ஓவத்து எழுது எழில் போலும்--மா தடிந்- திட்டோய்! நின் குன்றின்மிசை. |
குன்றத்தில் வேறுபட்ட பல ஒலிகள் ஒருங்கு இசைத்தல்
மிசை படு சாந்தாற்றி போல, எழிலி | 30 |
இசை படு பக்கம், இரு பாலும் கோலி, விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட; விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப, முரல் குரற் தும்பி அவிழ் மலர் ஊத; யாணர் வண்டினம் யாழ் இசை பிறக்க; |
35 |
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப; ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்- இரங்கு முரசினான் குன்று. |
சுனை நீரில் பாய்ந்து ஆடிய காதலர்
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து, அவண் மீ நீர் நிவந்த விறலிழை, ' கேள்வனை |
40 |
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என, பூ நீர் பெய் வட்டம் எறிய, புணை பெறாது அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு, கொழுநன் மகிழ் தூங்கி, கொய் பூம் புனல் வீழ்ந்து, தழுவும் தகை வகைத்து--தண் பரங்குன்று. |
45 |
குன்றத்தில் பலவகை மணத்துடன் வரும் காற்றுக்கள்
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய தண் கமழ் சாந்தம் தைஇய வளியும், கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த புயல் புரை கதுப்பகம் உளரிய வளியும், உருள்இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த |
50 |
முருகு கமழ் புகை நுழைந்த வளியும், அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த- பசும் பூண் சேஎய்!-நின் குன்றம் நன்கு உடைத்து. |
சீர்க்கு இசைய ஆடுபவளது மேனியழகும் கண்ணழகும்
கண் ஒளிர் திகழ் அடர், இடுசுடர் படர் கொடி மின்னுப் போல், ஒண் நகை தகை வகை நெறிபெற இடைஇடை இழைத்து யாத்த |
55 |
செண்ணிகைக் கோதை கதுப்போடு இயல, மணி மருள் தேன் மகிழ் தட்ப, ஒல்கிப் பிணி நெகிழப் பைந் துகில், நோக்கம் சிவப்பு ஊர, பூங் கொடி போல நுடங்குவாள், ஆங்குத் தன் சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான், |
60 |
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஓசிபவள் ஏர்- ஆடை அசைய, அணி அசைய, தான் அசையும் வாடை உளர் கொம்பர் போன்ம். வாளி புரள்பவை போலும், துடிச் சீர்க்குத் தோள் ஊழ் பெயர்ப்பவள் கண். |
65 |
முருகவேளை வாழ்த்துதல்
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை; ஆறு இரு தோளவை; அறு முகம் விரித்தவை; நன்று அமர் ஆயமோடு ஒருங்கு, 'நின் அடி உறை இன்று போல் இயைக!' எனப் பரவுதும்- ஒன்றார்த் தேய்த்த செல்வ! நிற் தொழுதே. |
70 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிபாடல் - 21. செவ்வேள் , நீர், கமழ், இலக்கியங்கள், ஒருங்கு, செவ்வேள், வளியும், புரை, பரிபாடல், நின், மகிழ், கொடி, குன்றத்தில், விடு, சுனை, அசைய, அமர், துடிச், போல், போலும், அருவி, முத்து, புனை, வேல், புகழ், சங்க, எட்டுத்தொகை, கடம்பின், இயைக, தோள், நிற், பரவுதும், எனப், தட்ப