பரிபாடல் - 16. வையை
(காதற் பரத்தையுடன் புனல் ஆடிய தலைமகன் தோழியை
வாயில் வேண்ட, அவள் புனல் ஆடியவாறு
கூறி, வாயில் மறுத்தது.)
கூறி, வாயில் மறுத்தது.)
பாடியவர் :: நல்வழிசியார்
இசையமைத்தவர் :: நல்லச்சுதனார்
பண் :: நோதிறம்
வையையில் நீர் வரவு
கரையே--கை வண் தோன்றல் ஈகை போன்ம் என, மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும், நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும், எவ் வயினானும்--மீதுமீது அழியும். துறையே--முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம், |
5 |
பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர் கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ, தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும் தத்து அரிக் கண்ணார் தலைத்தலை வருமே. |
10 |
செறுவே--விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின், படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும், களி நாள் அரங்கின் அணி நலம் புரையும். காவே--சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம் நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே-- |
15 |
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல். கான்-அலம் காவும், கயமுன், துருத்தியும், தேன் தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம் பூத்தன்று--வையை வரவு. |
தலைவன் காதற் பரத்தையுடன் கூடி மகிழ, வையையின் வரவு
வாய்த்தல்
கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து, | 20 |
குரும்பையின் முலைப் பட்ட பூ நீர் துடையாள், பெருந் தகை மீளி வருவானைக் கண்டே, இருந் துகில் தானையின் ஒற்றி, 'பொருந்தலை; பூத்தனள்; நீங்கு' எனப் பொய் ஆற்றால், தோழியர்-- தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் |
25 |
நாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து, இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான், மகிழ, களிப் பட்ட தேன் தேறல் மாற்றி, குருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர், 'பூத்தனள் நங்கை; பொலிக!' எனநாணுதல் |
30 |
வாய்த்தன்றால்--வையை வரவு.
வையை வானக் கங்கையை ஒத்து விளங்குதல் மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க் கரை மரம் சேர்ந்து கவினி; மடவார் நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர் மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தா அய்; |
35 |
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும், தேன் இமிர் வையைக்கு இயல்பு. |
வையைக்கு உரிய இயல்பு
கள்ளே புனலே புலவி இம் மூன்றினும், ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை, |
40 |
பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும், வெல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர் அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான், எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத் |
45 |
தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம்-- கொடித் தேரான் வையைக்கு இயல்பு. |
தோழி வையையை நோக்கிக் கூறுவாளாய் வாயில் மறுத்தல்
வரை ஆர்க்கும் புயல்; கரை திரை ஆர்க்கும், இத் தீம் புனல்; கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர், |
50 |
பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால் நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும், பூத்த புகையும், அவியும் புலராமை மறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம் வறாஅற்க, வைகை! நினக்கு. |
55 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிபாடல் - 16. வையை , தேன், வையை, நீர், மலர், புனல், வரவு, இலக்கியங்கள், இயல்பு, வையைக்கு, நாள், வாயில், பரிபாடல், தோற்றம், பூத்தனள், கமழ், வானம், ஆர்க்கும், எட்டுத்தொகை, பட்ட, பூத்த, மகிழ, பரத்தையுடன், தலைத்தலை, ஆடும், காதற், நலம், தீம், இமிர், சங்க