நற்றிணை - 53. குறிஞ்சி

யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃது அறிந்தனள்கொல்லோ? அருளினள்கொல்லோ? எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?- 'வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன், ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள் |
5 |
கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்று முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்; தண்ணென உண்டு, கண்ணின் நோக்கி, முனியாது ஆடப் பெறின், இவள் |
10 |
பனியும் தீர்குவள், செல்க!' என்றோளே! |
தோழீ ! தலைமகன் வைவிடுதலானே நீ துன்புற்றிருந்தனை இன்ன காரணத்தால் நீதான் இங்ஙனமாயினை என்று கூறாமல் யான் அஞ்சி அதனை மறைத்திருப்பவும். அன்னை வான் உற நிவந்த பெருமலைக் கவாஅன் ஆர்கலி வானம் தலைஇ நடுநாள் கனைபெயல் பொழிந்ª¢தன. அன்னை என்னை நோக்கி ஆகாயத்தில் மிகவுயர்ந்த பெரிய மலைப்பக்கத்தில் மிக்க இடியோசையையுடைய மேகம் மழைபெய்யத் தொடங்கி நள்ளிருளில் மிக்க மழை பொழிந்ததனாலே; கற்கள் நிரம்பிய காட்டின் கண் ஓடும் யாற்றிலே மரங்கள்காய்ந்த சருகுகளோடு கழித்தனவாகிய முகிழ்த்த பூங்கொத்துக்களையும் அடித்துக்கொண்டு வருகின்ற புதிய இனிய நீரானது; இவளுக்குற்ற நோயைத் தீர்க்கும் மருந்துமாகும்; அதனைக் குளிர்ச்சிபெறப் பருகி ஆண்டுள்ள காட்சிகளைக் கண்ணால் நோக்கி நீராட்டத்து வெறுப்பின்றி ஆடப்பெற்றால்; இவள் மெய்யின் நடுக்கமுந் தீர்குவள், ஆதலால் ஆங்குச் செல்வீர்களாக என்று கூறினள்; ஆதலின் அவள் தான் நமது ஒழுகலாற்றை முன்னமே அறிந்து வைத்தனள் கொல் ? அன்றி அருளினாற் கூறினள் கொல் ? நம் அன்னை கருதியது யாது கொல்? ஆராய்ந்து காண் !:
வரைவு நீட்டிப்ப, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது. - நல்வேட்டனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 53. குறிஞ்சி, இலக்கியங்கள், அன்னை, குறிஞ்சி, கொல், நற்றிணை, நோக்கி, தலைஇ, மிக்க, கூறினள், வானம், தீர்குவள், இவள், வான், யான், சங்க, எட்டுத்தொகை, அஃது, தான், நிவந்த, தோழி, கவாஅன்