நற்றிணை - 391. பாலை
ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே- புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும், |
5 |
பொன் படு, கொண்கான நன்னன் நல் நாட்டு ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின் யாரோ பிரிகிற்பவரே- குவளை நீர் வார் நிகர் மலர் அன்ன, நின் பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே? |
10 |
மடந்தாய்! குவளையின் நீர் வடிகின்ற ஒளி பொருந்திய மலர் போன்ற நின்னுடைய பெரிய அமர்த்தலையுடைய குளிர்ச்சியுற்ற கண்களிலே தௌ¤ந்த நீர் வடியும்படி நீ அழாதேகொள்!; அழுவதனை அறிந்தால் அவர் பொருள் கொணருமாறு செல்லுவதனை இன்னே ஒழிகுவர்காண்; புலியினது புள்ளி போன்ற புள்ளிகளமைந்த நிழலையுடைய மரங்கள் செறிதலினிடையே; படர்ந்த ஈரிய கொடியை மேய்ந்த நெடிய கரிய கொம்பையும் பருத்¢த தலையையுமுடைய எருமைமாடு; அக்கொடியினின்று தின்றொழித்த மலைப்பச்சையின் இலைகள் ஒள்ளிய தொடியையுடைய மகளிர் கலன்களை அணிதற்குப் பயன்படுமாறு கூட்டாநிற்கும்; கொண்கானத்தின்கணுள்ள நன்னனது நல்ல நாட்டிலிருக்கின்ற பொலிவு பொருந்திய ஏழில் மலையைத் தாம் பெறுவதாயினும்; நின்னைவிட்டுப் பிரிபவர் யார்?
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; வரைவு உணர்த்தியதூஉம் ஆம். - பாலை பாடிய பெருங்கடுங்கோ
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 391. பாலை, இலக்கியங்கள், பாலை, மலர், நீர், நற்றிணை, மகளிர், பொருந்திய, அன்ன, எட்டுத்தொகை, சங்க, புள்ளி, மேய்ந்த