நற்றிணை - 29. பாலை

நின்ற வேனில் உலந்த காந்தள் அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது, ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென, மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய, புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி |
5 |
யாங்கு வல்லுநள்கொல்தானே- யான், 'தன் வனைந்து ஏந்து இள முலை நோவகொல்!' என நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன் பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ, வெய்ய உயிர்க்கும் சாயல், |
10 |
மை ஈர் ஓதி, பெரு மடத்தகையே? |
அவளுடைய தொய்யில் வனைந்து பருத்த இளைய கொங்கைகள் நோவனவோ என்று; யான் நினைந்து அணைத்திருந்த கையை நெகிழ்த்த அதனைப் பொறாளாய்; தான் தன்னுடைய பெரிய அமர்த்த குளிர்ச்சியையுடைய கண்கள் நீர் வடிவனவாய்க் கலுழ வெம்மையாக உயிர்க்கின்ற; மென்மையையும் கரிய ஈரிய கூந்தலையும் பெரிய மடப்பத்தையும் உடைய தகுதிப்பாடுடைய என் புதல்வி; ஏனைய பருவம் எய்தாமல் வேனிற் பருவமொன்றுமே நிலை பெற்று நின்ற காய்ந்து வாடிய காந்தளையுடைய அழல் வீசுகின்ற நீண்ட கடத்திலே; நிற்குமாறு நிழலிடமும் பெறாது குட்டிகளையீன்று காட்டில் காவல் செய்திருந்த பெண்புலி; மிகவும் பசியுடையதென்று அதன் பசியைப் போக்கக் கருதி மயங்கிய மாலைப் பொழுதில் நெறியிற் செல்லுபவரைக் கொல்லும் பொருட்டு ஆண்புலி அந்நெறியை நோக்கியிருக்கும்; புல்லிய அதராகிய சிறியநெறியில்; யாங்ஙனம் நடக்க வல்லுநளோ?
மகள்போக்கிய தாய்சொல்லியது. - பூதனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 29. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, தான், ஈரிய, கலுழ, பெரிய, நினைந்து, அழல், எட்டுத்தொகை, சங்க, நின்ற, யான், வனைந்து