நற்றிணை - 128. குறிஞ்சி

'பகல் எரி சுடரின் மேனி சாயவும், பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான் உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின், அது கண்டிசினால் யானே' என்று, நனி |
5 |
அழுதல் ஆன்றிசின்- ஆயிழை!- ஒலி குரல் ஏனல் காவலினிடை உற்று ஒருவன், கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச் சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமொடு |
10 |
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே. |
ஆயிழாய்! பகற் பொழுதில் எரிகின்ற விளக்கு ஒளி மழுங்கிக் காட்டுதல் போல நின் மேனி வாடவும், இராகுவினாலே கவர்ந்து கொள்ளப்பட்ட திங்களின் ஒளி கெடுதல் போல நெற்றியின் ஒளி மறைபடவும் அக்காரணத்தை நீ எனக்கு உரைத்தாயல்லை; நினக்கு யான் ஓருயிரை இரண்டுடம்பின் கண்ணே பகுத்துவைத்தாற் போன்ற நின்னோடு தொடர்ச்சியுற்ற மாட்சிமையுடையேனாதலால் நீ இப்பொழுது மறைத்தொழுகு மதனை யான் அறிந்துளேன் என்று நீ கருதி; யான் நினக்கு அதனை உரையாததன் காரணமாக மிக அழுது வருந்தாநின்றனை; இனி இங்ஙனம் அழாதேகொள்!; தலை சாய்ந்த கதிரையுடைய தினைப்புனத்தே காவல் செய்யுமிடத்துக் கண்ணி சூடிக் கழல் அணிந்து மாலை வேய்ந்துளனாகி ஒருவன் வந்துற்று உள்ளங் குளிர்பூறும்படி என் முதுகை அணைத்துப் புல்லினனாக; அது முதற்கொண்டு அதனையே கருதிய உள்ளத்துடனே இப்பொழுது யான் உற்ற நோய் இத்தன்மையதாய் இராநின்றது;
குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம். - நற்சேந்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 128. குறிஞ்சி, யான், இலக்கியங்கள், நினக்கு, நற்றிணை, குறிஞ்சி, இப்பொழுது, குறை, உற்ற, தலைவி, எனக்கு, எட்டுத்தொகை, சங்க, மேனி, ஒருவன்