நற்றிணை - 111. நெய்தல்

அத்த இருப்பைப் பூவின் அன்ன துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர், வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர், மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, |
5 |
திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி, வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி, நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் பெருங் கழிப் பாக்கம் கல்லென வருமே- தோழி!- கொண்கன் தேரே. |
10 |
தோழீ ! சுரத்தின்கணுள்ள இருப்பைப் பூப்போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களுடனே ஏனைத் திரளாயுள்ள மீன்களையும் பெறுமாறு; பின்னி வரிந்த வலையையுடைய பரதவர்தம் வன்மை மிக்க தொழிலையுடைய சிறுமக்கள்; மரங்களின்மேலேறி நின்று மானினங்களைத் தகைக்கும் பொருட்டு வெய்ய வலியையுடைய வேட்டுவச்சிறுவர் விரும்பி எழுந்தாற்போல; மீன் பிடிக்கும் படகின் மேலேறிக் கொண்டு கடற்பரப்பின்கண்ணே கடந்து சென்று; ஈர்வாள் போன்ற வாயையுடைய சுறாமீனையும் மற்றும் வலிமையுள்ள பிற மீன்களையும் பிடித்து அவற்றைத் துண்டித்து இறைச்சிகளை நிரப்பிய தோணியராய் மீண்டுவந்து காற்று வீசிப் பரப்பிய மணற்பரப்பில் இறக்கியிடும்; பெரியகழி சூழ்ந்த பாக்கம் கல்லென ஒலிக்குமாறு கொண்கனது தேர் வாராநிற்குமாகலின் நீ வருந்தாதே கொள் !
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 111. நெய்தல், இலக்கியங்கள், மீன், நற்றிணை, நெய்தல், கல்லென, தோழி, மீன்களையும், பாக்கம், இருப்பைப், எட்டுத்தொகை, சங்க, மேற்கொண்டு