குறுந்தொகை - 238. மருதம் - தோழி கூற்று
(பரத்தையினிடத்தில் இருந்து மீண்டு வந்த தலைவன் தோழியின்பாற்சூள் கூறித் தெளிவிக்கப் புகுகையில், ‘‘எம் நலனைத் தந்து நின்சூளைக் கொண்டு செல்க’’ என்று அவள் கூறி வாயில் மறுத்தது.)
பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி ஒண்டொடி மகளிர் வண்ட லயரும் தொண்டி யன்னவென் நலந்தந்து கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே. |
5 |
- குன்றியனார். |
மகிழ்ந! பச்சை அவலை இடித்த கரிய வயிரம் பொருந்திய உலக்கையை அழகிய கதிரை உடைய நெற் பயிரை உடைய வயலினது வரப்பாகிய அணையிலே படுக்க வைத்து ஒள்ளிய வளையை உடைய பெண்கள விளையாட்டைச் செய்யும் தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற எனது பெண்மை நலத்தைத் தந்து விட்டு நினது சூளைப் பெற்றுக் கொண்டு செல்வாயாக.
முடிபு: மகிழ்ந, என் நலம் தந்து நின் சூள் கொண்டனை சென்மோ.
கருத்து: நீ சூள் கூறுவதனால் யாம் மயங்கேம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 238. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், மருதம், உடைய, தந்து, தோழி, கூற்று, குறுந்தொகை, மகிழ்ந, சூள், சென்மோ, தொண்டி, சங்க, கொண்டு, எட்டுத்தொகை, கொண்டனை