குறுந்தொகை - 182. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தன் குறையைத் தோழி மறுத்தாளாக, “தலைவியும் இரங்கிக்குறைநயந்திலள்; தோழியும் உடம்படவில்லை; ஆதலின் இனி மடலேறுவேன்” என்பதுபடத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல் மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் தெருவின் இயலவும் தருவது கொல்லோ |
5 |
கலிந்தவிர் அசைநடைப் பேதை மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே. |
|
- மடல் பாடிய மாதங்கீரனார். |
நெஞ்சே அழகு ஒழுகி விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி நம்மாட்டு நெஞ்சம் நெகிழ்ந்திலள் நாம் அத் தலைவியினிடத்துவிடுதற்கு அமைந்த தூது சிறந்தஉச்சியையுடைய பனையின் கண் முதிர்தலையுடைய பெரிய மடலாற் செய்த குதிரைக்கு மணிகள் அணிந்த பெரிய மாலையை முறைமையோடு அணிந்து நாம் வெள்ளிய என்பை அணிந்துகொண்டு பிறர் இகழும்படி அம்மடல் மாவின்மேல் தோன்றி ஒரு நாளில் பெரிய நாணத்தை விட்டு விட்டு தெருவின் கண் செல்லவும் தருவதோ?
முடிபு: பேதை மெலிந்திலள்; தூது, மா மடலில் தார் பூட்டிஎன்பணிந்து எள்ளத் தோன்றி நாண் நீக்கித் தெருவின் இயலவுந் தருவதுகொல்?
கருத்து: நான் இனி மடலேறுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 182. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, தெருவின், தோன்றி, பெரிய, கூற்று, குறுந்தொகை, தூது, விட்டு, நாம், எள்ளத், எட்டுத்தொகை, சங்க, பேதை