குறுந்தொகை - 137. பாலை - தலைவன் கூற்று
(தலைவியைப் பால்வயத்தனாகிக் கண்டு அளவளாவிய தலைவன், “நின்னை யான் பிரியேன்” என்று கூறி, அவள் பிரிவென்ப தொன்றுண்டென்று ஓர்ந்து அஞ்சுமாறு செய்தது.)
மெல்லியல் அரிவைநின் னல்லகம் புலம்ப நிற்றுறந் தமைகுவெ னாயின் எற்றுறந் திரவலர் வாரா வைகல் பலவா குகயான் செலவுறு தகவே. |
|
- பாலை பாடிய பெருங் கடுங்கோ. |
மென்மைத் தன்மையையுடைய அரிவையே நின் நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்த நின்னைப் பிரிந்து சென்று சென்ற இடத்தே மனம் பொருந்தி இருப்பேனாயின் யான் அங்ஙனம் செல்வதற்குற்ற தக்க வினையின் கண் என்னை நீங்கி இரப்போர் வாராத நாட்கள் பல வாகுக!
முடிபு: அரிவை, நின் அகம் புலம்ப நிற்றுறந்து அமைகுவெனாயின் யான் செலவுறு தகவு இரவலர் வாரா வைகல் பலவாகுக.
கருத்து: நின்னைப் பிரியேன்; பிரியின் அறப்பயனை இழந்தவனாவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 137. பாலை - தலைவன் கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவன், கூற்று, யான், குறுந்தொகை, செலவுறு, நின், வைகல், நின்னைப், வாரா, எட்டுத்தொகை, புலம்ப, சங்க