கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 88
ஒரூஉ; கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக, தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு அடியரோ ஆற்றாதவர்; கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று; | 5 |
வினைக்கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் மாயம், மருள்வாரகத்து; ஆயிழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா என்கண் எவனோ, தவறு; இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல், | 10 |
வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும், ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார் சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும், தவறாதல் சாலாவோ? கூறு; 'அது தக்கது; வேற்றுமை என்கண்ணோ ஓராதி; தீது இன்மை | 15 |
தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு; இனித் தேற்றேம் யாம், தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் தார் மயங்கி வந்த தவறு அஞ்சி, போர் மயங்கி, நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி | 20 |
யார் மேல்? விளியுமோ? கூறு. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 88, இலக்கியங்கள், நின், கலித்தொகை, கூறு, மயங்கி, நல்லார், மருதக், கலித்தொகை, வந்த, யார், தவறு, சங்க, எட்டுத்தொகை