கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 80
நயம் தலை மாறுவார் மாறுக; மாறா, கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ், பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி திகழ் ஒளி முத்து அங்கு அரும்பாகத் தைஇப் பவழம் புனைந்த பருதி சுமப்ப, | 5 |
கவழம் அறியா நின் கை புனை வேழம் புரி புனை பூங் கயிற்றின் பைபய வாங்கி, அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே வருக! எம் பாக மகன்! கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் | 10 |
தளர் நடை காண்டல் இனிது; மற்று, இன்னாதே, 'உளம்' என்னா நுந்தைமாட்டு எவ்வம் உழப்பார் வளை நெகிழ்பு யாம் காணுங்கால்; ஐய! காமரு நோக்கினை, 'அத்தத்தா' என்னும் நின் தே மொழி கேட்டல் இனிது; மற்று, இன்னாதே, | 15 |
உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார் எவ்வ நோய் யாம் காணுங்கால்; ஐய! 'திங்கட் குழவி, வருக!' என, யான் நின்னை அம்புலி காட்டல் இனிது; மற்று, இன்னாதே, நல்காது நுந்தை புறம் மாறப்பட்டவர் | 20 |
அல்குல் வரி யாம் காணுங்கால்; ஐய! எம் காதில் கனங் குழை வாங்கி, பெயர்தொறும், போது இல் வறுங் கூந்தல், கொள்வதை, நின்னை யாம் ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் தாது தேர் வண்டின் கிளை பட, தைஇய | 25 |
கோதை பரிபு ஆட; காண்கும். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - மருதக் கலி 80, யாம், இலக்கியங்கள், இனிது, மற்று, இன்னாதே, நுந்தை, காணுங்கால், சாஅய்ச், புனை, கலித்தொகை, மருதக், கலித்தொகை, நின்னை, எட்டுத்தொகை, சங்க, வருக, நின், வாங்கி