கலித்தொகை - கலித்தொகை - குறிஞ்சிக் கலி 65
திருந்திழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும் பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது: ஒருநிலையே மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல், அம் துகில் போர்வை அணிபெறத் தைஇ, நம் இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக | 5 |
தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும், காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம் சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை, தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே, பாரா, குறழா, பணியா, 'பொழுது அன்றி, | 10 |
யார், இவண் நின்றீர்?' எனக் கூறி, பையென, வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது, 'தையால்! தம்பலம் தின்றியோ?' என்று, தன் பக்கு அழித்து, 'கொண்டீ' எனத் தரலும் யாது ஒன்றும் வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி, | 15 |
'கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' 'மற்று யான் ஏனைப் பிசாசு; அருள்; என்னை நலிதரின், இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்' எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது, | 20 |
ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே, கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே, ஒடுங்கா வயத்தின், கொடுங் கேழ், கடுங்கண், இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர் ஏதில் குறு நரி பட்டற்றால்! காதலன் | 25 |
காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம் ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான் வீழ்க்கைப் பெருங் கருங் கூத்து. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - குறிஞ்சிக் கலி 65, இலக்கியங்கள், கலித்தொகை, முது, யான், குறிஞ்சிக், கலித்தொகை, நிற்ப, கடிது, பார்ப்பான், ஊர்க்கு, எட்டுத்தொகை, சங்க, எல்லாம், ஆங்கே