கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 134
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன், ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின், கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல், கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின், இருங் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போல, | 5 |
பெருங் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர, போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய், பாயல் கொள்பவை போல, கய மலர் வாய் கூம்ப, ஒருநிலையே நடுக்குற்று, இவ் உலகெலாம் அச்சுற, இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருண் மாலை; | 10 |
தவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின், இகல் இடும் பனி தின, எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே, கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர, கடல் நோக்கி, அவலம் மெய்க் கொண்டது போலும் அஃது எவன்கொலோ? நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின், | 15 |
கடும் பனி கைம்மிக, கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே, நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய, மணல் நோக்கி, இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்கொலோ? வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின், கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே, | 20 |
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால், மரன் நோக்கி, எவ்வத்தால் இயன்ற போல், இலை கூம்பல் எவன் கொலோ? என ஆங்கு, கரை காணாப் பௌவத்து, கலம் சிதைந்து ஆழ்பவன் திரை தரப் புணை பெற்று, தீது இன்றி உய்ந்தாங்கு, | 25 |
விரைவனர் காதலர் புகுதர, நிரை தொடி துயரம் நீங்கின்றால், விரைந்தே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 134, இலக்கியங்கள், ஆங்கே, கலித்தொகை, நினைத்தலின், நோக்கி, ஆழ்ந்து, கடல், நோய், கலித்தொகை, நெய்தற், போலும், அஃது, எவன்கொலோ, நலன், நடுங்கு, நெஞ்சினேன், மலர், சங்க, எட்டுத்தொகை, கொள், போல்