கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 119
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப் பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர, இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர, நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர, கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்ப, | 5 |
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச, முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த, சிறு வெதிர்ங் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மென, பறவை தம் பார்ப்பு உள்ள, கறவை தம் பதிவயின் கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, | 10 |
மா வதி சேர, மாலை வாள் கொள, அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் காலை ஆவது அறியார், | 15 |
மாலை என்மனார், மயங்கியோரே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - நெய்தற் கலி 119, இலக்கியங்கள், கலித்தொகை, கலித்தொகை, நெய்தற், மாலை, போல், எட்டுத்தொகை, சங்க