அகநானூறு - 92. குறிஞ்சி
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி, படு மழை பொழிந்த பானாட் கங்குல், குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச் செங் கண் இரும் புலி குழுமும் சாரல் வாரல் வாழியர், ஐய! நேர் இறை |
5 |
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும் காவல் கண்ணினம் தினையே; நாளை மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண், தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை, |
10 |
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் திருமணி விளக்கின் பெறுகுவை இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே. |
இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 92. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, மென், செங், சங்க, எட்டுத்தொகை, நெடு