அகநானூறு - 73. பாலை
பின்னொடு முடித்த மண்ணா முச்சி நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ; வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க, வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், |
5 |
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர 'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என, என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி இருவேம் நம் படர் தீர வருவது |
10 |
காணிய வம்மோ காதல்அம் தோழி! கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின், ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப் பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி |
15 |
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர் சென்ற தேஎத்து நின்றதால், மழையே. |
தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. - எருமை வெளியனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 73. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, தோழி, இருள், சங்க, எட்டுத்தொகை