அகநானூறு - 69. பாலை
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் |
5 |
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் பராரை நெல்லி அம் புளித் திரள் காய் கான மட மரைக் கணநிரை கவரும் வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று, விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் |
10 |
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம் நீடலர் வாழி, தோழி! ஆடு இயல் மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம் சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் |
15 |
அம்புடைக் கையர் அரண் பல நூறி, நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் தலை நாள் அலரின் நாறும் நின் அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. |
20 |
'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 69. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, மாண், தோழி, சங்க, எட்டுத்தொகை, இயல்