அகநானூறு - 67. பாலை
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி வானம் வாழ்த்தி பாடவும், அருளாது உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன், மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை, அரம் போழ் நுதிய வாளி அம்பின், |
5 |
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார், நெல்லி நீளிடை எல்லி மண்டி, நல் அமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் |
10 |
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர் கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை, 'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு |
15 |
நிலம் படு மின்மினி போல, பல உடன் இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம் நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே! |
பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நோய்பாடியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 67. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, உடன், துறந்து, சங்க, எட்டுத்தொகை