அகநானூறு - 4. முல்லை
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின், பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப, மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, |
5 |
கருவி வானம் கதழ் உறை சிதறி, கார் செய்தன்றே, கவின் பெறு கானம். குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய, பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த |
10 |
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன், கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது, நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் |
15 |
போது அவிழ் அலரின் நாறும் ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. |
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 4. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, மாண், எட்டுத்தொகை, சங்க