அகநானூறு - 380. நெய்தல்
தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'நும் ஊர் யாது?' என்ன, நணி நணி ஒதுங்கி, முன் நாள் போகிய துறைவன், நெருநை, அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன், |
5 |
தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம் அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என, நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே; உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்; நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது |
10 |
துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்; வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ? அம்ம, தோழி! கூறுமதி நீயே. |
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 380. நெய்தல் , இலக்கியங்கள், அகநானூறு, நெய்தல், குறை, தோழி, சங்க, எட்டுத்தொகை