அகநானூறு - 298. குறிஞ்சி
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி, மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட, மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத் |
5 |
தண் துளி அசைவளி தைவரும் நாட! கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது, இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது, பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின், |
10 |
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி, தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ, மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண் நீ வந்ததனினும், இனிது ஆகின்றே தூவல் கள்ளின் துனை தேர், எந்தை |
15 |
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும் யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள், காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன், யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு, இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர் |
20 |
நீடலர் ஆகி வருவர், வல்லென; கங்குல் உயவுத் துணை ஆகிய துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே! |
இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 298. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, மல்கு, கெழு, சங்க, எட்டுத்தொகை