அகநானூறு - 296. மருதம்
கோதை இணர, குறுங் கால், காஞ்சிப் போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல், அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும் பெரு நீர் வையை அவளொடு ஆடி, |
5 |
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின் கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில் பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல் |
10 |
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன், மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய மலிதரு கம்பலை போல, அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே. |
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது. -மதுரைப் பேராலவாயார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 296. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, வாயில், எட்டுத்தொகை, சங்க